கத்தோலிக்க தேவாலயங்களின் அறக்கட்டளை அந்தஸ்தை இடைநிறுத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வான்கூவரைச் சேர்ந்த நபர் ஒருவரினால் இணைய மகஜர் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த இணைய மகஜரில் சுமார் ஆறாயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வதிவிடப் பாடசாலைகளில் கற்றவர்கள் தொடர்பிலான தகவல்கள் காணாமல் போயுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டேவிட் தோம்சன் என்ற நபரே இந்த இணைய மகஜரின் மூலம் கத்தோலிக்க தேவாலயங்களின் அறக்கட்டளை அந்தஸ்தை ரத்து செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
கனேடிய பழங்குடியின மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.