Home இலங்கை சமூக ஊடகங்களை முடக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

சமூக ஊடகங்களை முடக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

by Jey

சமூக வலைத்தளங்கள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகததுறை அமைச்சருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் சமூக வலைத்தளங்களைக் கண்காணித்தல், கட்டுப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசேட அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும், இதனை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புவ்கெல்ல தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்று இதற்கு முன்னர் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

எனினும், சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களும், பொய்யான பரப்புரைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும், இவற்றை சட்டவரையறைகளுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

related posts