சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட பலரும் ஆஸ்பத்திரிகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொண்டு வருகிறார்கள். இதைபோல உள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதற்காகவும், சிகிச்சை அளிப்பதற்காகவும் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை ஓசூர் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை மக்கள் தேடி வரும் சூழலை மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும். நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மருந்துகள் வழங்கப்பட உள்தாக
அவர் கூறினார்.