கொரோனா ஊரடங்கி காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் பெரிய படங்கள் தொடங்கி சிறிய படங்கள் வரை ஓடிடியில் வெளியாகி வருகிறது. சூர்யாவின் 2டி பேனர் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி ஒரு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.
அதன் பிறகு சிறிய சிறிய படங்கள் வந்தாலும் சூர்யாவின் சூரரைப்போற்று ஓடிடியில் ரிலீசாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு குரல் வலுவாக இறங்கியது. இனி சூர்யாவின் திரைப்படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறினார்கள்.
இதற்கிடைடில் நடிகர் சூர்யா மாஸ் காட்டும் வகையில் தனது அடுத்தடுத்த படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகிறார்.