இன்று (வியாழக்கிழமை) திண்டுக்கல்லில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகரும் இயக்குநருமான சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. “நந்தா பெரியசாமி” இயக்கும் தனது புதிய படமான “ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பில் நடிகர் சேரன் கலந்துக்கொண்டுள்ளார். இந்தப்படத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு வீடு முக்கிய பாத்திரமாகவே இடம் பெற்றிப்பதாகவும், இங்குதான் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த படப்பிடிப்பின் போது சேரன் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி சேனல்களால் நீல சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்திருந்த சேரன், கால் இடறி கீழே விழுந்த காட்சி ஒளிபரப்பட்டது. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.