தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரையில் 10 இலட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 இலட்சத்து 54 ஆயிரத்து 711 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 702 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, முகாம்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஹொட்டல்கள் மற்றுட் வணிக வளாகங்களில் நுழைய அனுமதி இரத்து என அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அத்துடன் தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்துநின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.