Home கனடா அரச பணியாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்குவது குறித்து கவனம்

அரச பணியாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்குவது குறித்து கவனம்

by Jey

அரச பணியாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ள தயங்கிக் கொண்டிருந்தவர்கள் தற்பொழுது தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தினால் ஒழுங்குப்படுத்தப்படும் துறைகளில் தடுப்பூசியை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விமான சேவை நிறுவனங்கள், வங்கித்துறை, ரயில் சேவை உள்ளிட்டன போன்றவற்றில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி ஏற்றுகையை கட்டாயப்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

related posts