கொழும்பில் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு இடம்பெறும் என வெளியான வதந்திகள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் விசேட குழு விசாரணை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பு – தெஹிவளை, வெள்ளவத்தை, நுகேகொட, மிரிஹான, கிருளபனை உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு இடம்பெறும் என தகவல் பரப்பப்பட்டது.
2019ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி நபர் ஒருவரால் பகிரப்பட்ட குரல் பதிவு மீண்டும் சமூக வலைத்தளங்களில் உலாவருவதாக அவர் கூறினார்.
அவ்வாறு குண்டு வெடிப்பு ஆபத்துக்கள் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.