அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஜென்னட்ஸ் பியர் என்ற மீன்பிடி துறையில் ஒரு மீனவரின் வலையில் அதிசய மீன் ஒன்று சிக்கி உள்ளது.அந்த மீன் முதலில் பிடிப்பட்ட போது ஒரு வழக்கமான மீன் தான் பிடிபட்டுள்ளது என்று நினைத்தவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. ஆனால் பிடிபட்ட மீனினுடைய வாயின் வித்தியாசமான அம்சங்களைக் கண்டு மக்கள் மிகவும் வியப்படைந்துள்ளனர்.
வட கரோலினாவின் மீன்பிடி துறையில் வழக்கமாக மீன் பிடிக்கும் நாதன் மார்ட்டின் பிடித்துள்ளார். இந்த வகை கடல் உயிரினத்தை தான் நீண்ட காலமாக தேடி கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் வாயில் பற்கள் நிறைந்த மீனின் முகத்தை நேரடியாக பார்த்த போது தனது பல நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
மீனின் தலை செம்மறி ஆட்டு தலையை ஒத்திருப்பதால் ஷீப்ஸ்ஹெட் (ஆட்டுதலை)என பெயரைப் பெற்றது. வித்தியாசமான நீர்வாழ் விலங்கின் போட்டோவை, மீன்பிடி துறை தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளது.