ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடா அரச பொறிமுறைமையில் சிகப்பு நாடா முறைமை நீடித்து வருவதனால் ஏதிலிகளை அழைத்து வருவதில் சிரமங்கள் நிலவி வருவதாக்க் குறிப்பிடப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் கனேடிய படையினர் கடமையாற்றிய காலங்களில் அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக கடமையாற்றிய ஆப்கான் பிரஜைகளை கனடாவில் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏதிலிகளுக்கு அடைக்கலம் வழங்கும் பொறிமுறையில் காணப்படும் கால தாமதம் ஆப்கான் ஏதிலிகளின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதி ஆப்கான் ஏதிலிகள் அண்மையில் கனடாவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.