Home இலங்கை சஜித்தின் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

சஜித்தின் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

by Jey

நாட்டு மக்களின் நுகர்வுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான கேஸ் மற்றும் பால் பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. கேஸ் கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசையில் நிற்கின்றனர். அதே போன்று பால்மா கொள்வனவு செய்யவும் மக்கள் வரிசையில் நிற்பதை காண முடிகிறது.
அரசாங்கம் தமது ஒரு வருட முடிவில் இயலாமை மற்றும் செயற்திறன் இன்மை போன்ற சான்றிதழ்களை கையில் வைத்துள்ளது. மனிதாபிமானமற்ற தன்மை, துஷ்ட நிலையை அரசாங்கத்திடம் காண முடிகிறது.
கொரோனா வைரஸினால் மிகவும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உணவு தயாரிப்பதற்கான கேஸ் என்று பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதே போன்று பால்மா அதிசொகுசு பிரிவினருக்கு மாத்திரம் என்றாகி உள்ளது. குழந்தைக்கு தேவையான பால் மாவை பெற்றுக்கொள்ள முடியாத நிலை இந்த அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ளது.
நஷ்டத்தில் செயற்பட முடியாது என கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்த நஷ்டத்தை போக்கி அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பணக்காரர்களுக்கு சலுகைகள் வழங்கி நாட்டில் பணத்தை இல்லாது செய்து கொண்டது. அதன் மூலம் 600 பில்லியன் நாட்டுக்கு இல்லாமல் போனது.
அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாங்கிக் கொள்ள முடியாத அளவு அதிகரித்துள்ளது. அரசாங்கத்திற்கு இது குறித்து எவ்வித அக்கறையும் இல்லை. விலை கட்டுப்பாடு என்ற பொறுப்பிலிருந்து விலகி அதனை தவறாக பயன்படுத்தியுள்ளது. பொருட்களின் விலைகளை நினைத்தால் போல் விற்பனையாளர்கள் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
தற்போது நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. எரிபொருள் கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கத்திடம் போதியளவு வசதிகள் இல்லை என்பதால் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு இலங்கை முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.
நாட்டின் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமடைந்து செல்கிறது. பாரிய ஆரவாரத்துடன் நியமிக்கப்பட்ட புதிய நிதி அமைச்சரின் கீழும் பழைய நிலைமையே காணப்படுகிறது. அழிவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே மாற்றமாக இருக்கிறது.
வயது முதிர்ந்த ஒருவர் தனது மொத்த சம்பளத்தில் 66 விதத்தை உணவுக்காக செலவிட வேண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உலக வாழ்க்கைச் செலவு தரவு ‘ (global cost-of-living‍ database) தகவல்கள் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளன. உணவுக்கு வழியில்லாத வறுமையான நாடுகள் வரிசையில் இலங்கையும் தள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கம் படிப்படியாக மற்றும் வெற்றிகரமாக நாட்டு மக்களை முழுமையாக அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையை தீர்க்க அனைத்து கட்சி தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் இதுவரை அரசாங்கத்திற்கு அதற்கான அக்கறையில்லை. அதற்கு அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் காரணமாக இருக்கிறது.
இவர்கள் இந்த நாட்டினுடைய அப்பாவி மக்களின் உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதை உணரவில்லை. அதனால் நாட்டு மக்களுக்கே அதன் பிரதி பலன்களை அனுபவிக்க வேண்டி உள்ளது.
சஜித் பிரேமதாச – தலைவர்
ஐக்கிய மக்கள் சக்தி

related posts