ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.
மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆப்கானிஸ்தானின் நான்காவது பெரிய நகரமான மசார் இ ஷரிப் நகரை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நான்காவது பெரிய நகரமான மசார்-இ-ஷெரீப்பிலிருந்து கிளம்பும் சிறப்பு விமானம் மூலம் அங்கிருந்து வெளியேற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.