எட்மோன்டனில் காவல்துறையினர் தம்மை தாக்கியதாக பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Eliot McLeod என்ற நபரே இவ்வாறு எட்மோன்டன் மாகாண நீதிமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சைக்கிளிலில் சென்று கொண்டிருந்த தம்மை காவல்துறை உத்தியோகத்தர் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
தம்மை தாக்க வேண்டாம் என கோரிய போது காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.