கனேடியரின் மேன்முறையீட்டை சீன நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள Huawei நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரி Meng Wanzhou ஐ விடுவிக்கும் நோக்கில் இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Robert Schellenberg என்ற கனேடிய பிரஜைக்கு இவ்வாறு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கனடாவின் ராஜதந்திரி ஒருவரும் பிரபல வர்த்தகர் ஒருவரும் சீன அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் Robert Schellenberg மீதான தண்டனைக்கு கனடா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சீனாவிற்கான கனேடிய தூதுவர் டொமினிக் பார்டோன் இந்த தண்டனை விதிப்பினை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.