Home இலங்கை கொரோனாவை விட அரசாங்கம் மோசமான வைரஸாக மாறியுள்ளது

கொரோனாவை விட அரசாங்கம் மோசமான வைரஸாக மாறியுள்ளது

by Jey

கொரோனா வைரஸ் காரணமாக துன்பங்களை அனுபவித்து வரும் நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் அதைவிட பயங்கரமான வைரஸாக மாறியுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அதனால் கொரோனாவை விட அரசாங்கத்திடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது தொடர்பில் நாட்டு மக்களுக்கும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கத்தால் அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் இதனால் சாதாரண நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விலைக்கட்டுப்பாடு நிர்ணயிப்பதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் எதுவும் நடைமுறையில் இல்லை எனவும் அவை அனைத்தும் வெறும் அறிவிப்புகளாக மாத்திரமே காணப்படுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மரக்கறி, பழங்களின் விலை தாங்கிக் கொள்ள முடியாத அளவு அதிகரித்துள்ளதாகவும் பால்மா தட்டுப்பாடு காரணமாக கர்ப்பிணி தாய்மார் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காணப்படும் ஏனைய நாடுகள் தமது நாட்டு மக்களுக்கு சலுகைகளை வழங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது இலங்கை அரசாங்கம் அதற்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

related posts