தமிழகத்தில் கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 38 சதவிகிதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர். வரும் பண்டிகை காலங்களில் கூட்டம் சேராமால் தனிமையிலேயே கொண்டாடுங்கள்.
தமிழகத்தில் மாவட்டங்களில் கடந்தசில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 4 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தமிழக அரசு அறிவுறுத்திய கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொத்து கொத்தாக கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும்.