வதிவிடப்பாடசாலை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பழங்குடியின சமூகம் அறிவித்துள்ளது.
மூன்று பழங்குடியின சமூகத்தினரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வான்கூவரில் கடந்த 1899ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இயங்கி வந்த வதிவிடப் பாடசாலைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெரும் எண்ணிக்கையிலான வதிவிடப்பாடசாலைகளில் பழங்குடியின சிறார்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வதிவிடப்பாடசாலைகளில் அடையாளம் காணப்படாத பல புதைகுழிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இனம் காணப்படாத சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த வதிவிடப் பாடசாலைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.