சீனாவில் இரண்டு கனேகடியர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Michael Spavor என்ற கனேடியருக்கு சீனா நீதிமன்றம் பதினொரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதற்கு முன்னர் Robert Schellenberg என்ற கனேடியருக்கு சீன நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த்து.
Huawei நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரி Meng Wanzhou ஐ கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு கனேடியர்கள் தண்டிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகரான Michael Spavor கடந்த 2018ம் ஆண்டு முதல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பாவோரின் 96600 டொலர்கள் பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சீனாவின் இந்த தண்டனைகள் நியாயமற்றவை எனவும், வன்மையாக்க் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.