9 இயக்குநர்கள், 9 குறும்படங்கள் என பிரம்மாண்டமாக ‘நவரசா’ எனும் தலைப்பில் உருவான ஆந்தாலாஜி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. மணிரத்னம் தயாரித்துள்ள இந்த வெப்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வெப் தொடரில் இயக்குனரானது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்
அரவிந்த்சாமி.
கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கியுள்ளனர்ர். இதில், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த 9 கதைகளில் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் ரெளத்திரம் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார் அரவிந்த்சாமி. நவரசா மூலம் முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் அரவிந்த்சாமி. இதில், ஸ்ரீராம் ரித்விகா, அபினயா ஸ்ரீ, கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகராக இருந்து இயக்குனராக மாறியது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் அரவிந்த்சாமி.
அதில், மணி சார் நவரசா குறித்து என்னுடன் பேசியபோது நான் அதில் பங்கேற்க முடியுமா, எனக் கேட்டார். நான் அவரிடம் இயக்குநராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வு தான் என்று கூறிவிட்டார். இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் துவங்கியது. இயக்குநராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்ததது தான் அதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆந்தாலஜியில் கோபத்தை நான் தான் தேர்ந்தெடுத்தேன் அப்போது என்னுள் ஒரு ஐடியா தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையை கூறலாம் என்று முவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்துள்ளார்.