தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் மாற்றியமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் படி, தீவிரமில்லாதா கொரோனா சிகிச்சைக்கு ரூ.3000 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7.500 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டோருக்கான வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு ரூ.56,200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.27,100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.