ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த 32ஆவது ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்று அச்சத்தினார். இவரது வெற்றியை பிரதமர் உள்ளிட்டோர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடியது.
பின்னர் நாடு திரும்பிய மீராபாய் சானு (Mirabai Chanu) அவர்கள் இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பிற்கு இதனை பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
இதனிடையில் நேற்று மீராபாய் சானு பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான்கானை (Salman Khan) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதை சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் “உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன்.மீராபாய் சானு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எப்போதும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்து நிச்சயம் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.