Home கனடா கனடாவில் கொவிட் நான்காம் அலை ஆரம்பித்துள்ளது

கனடாவில் கொவிட் நான்காம் அலை ஆரம்பித்துள்ளது

by Jey

கனடாவில் கொவிட் நான்காம் அலை ஆரம்பித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கொவிட் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை மீளவும் அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளது.

கனடாவின் கடந்த ஏழு நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் சராசரி எண்ணிக்கை 1300 ஆக பதிவாகியுள்ளது.

இது கடந்த வாரத்தை விடவும் 60 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அதிகளவில் கொவிட் தொற்று உறுதியாளாகள் பதிவாகியுள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக அல்பர்ட்டா, சஸ்கட்ச்வான், ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களை வரிசைப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

related posts