Home கனடா கனடாவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகளில் உயர்வு

கனடாவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகளில் உயர்வு

by Jey

கனடாவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மைக்ரோ சிப்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு கனடாவில் பயன்படுத்தப்ட்ட கார்களின் விலை உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 18383 டொலராக காணப்பட்டதாகவும், இந்த ஆண்டில் 20736 டொலராக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது சுமார் 12.8 வீத உயர்வாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய கார் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் மக்கள் பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

இதனால் பழைய அல்லது பயன்படுத்திய கார்களின் விலைகளில் உயர்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts