Home உலகம் கொரோனா மையமாக மாற்றப்பட்ட – பயணிகள் கப்பல்

கொரோனா மையமாக மாற்றப்பட்ட – பயணிகள் கப்பல்

by Jey

இந்தோனேசியாவில் பல்வேறு மாகாணங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டின் ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தொற்று பாதித்தவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு கேஎம் உம்சினி என்ற பயணிகள் கப்பல் ஒன்று தற்காலிக கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது. தெற்கு சுலவேசி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு கொரோனா பாதித்தவர்கள் 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 60 மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்தோனேசியாவில் தற்போதைய நிலவரப்படி இதுவரை 37 லட்சத்து 74 ஆயிரத்து 155 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

related posts