எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தலைமையிலான லிபரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கனடாவின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுனர் நாயகம் சிமோன் மேரியிடம் தேர்தல்கள் குறித்து பிரதமர் கோரிக்கை விடுக்க உள்ளார்.
நாட்டில் கொவிட் பெருந்தொற்று நிலைமை பரவி வரும் நிலையில் பொதுத் தேர்தல் நடாத்துவது பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய ட்ரூடே அரசாங்கம் 2019ம் ஆண்டில் சிறுபான்மை அதிகாரத்துடன் ஆட்சியை பிடித்துக் கொண்டது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு சிறுபான்மை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என லிபரல் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் ட்ரூடே தலைமையிலான லிபரல் அரசாங்கம் தேர்தலை நடத்தி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.