Home இந்தியா தமிழ்நாடு பட்ஜெட் துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு பட்ஜெட் துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு

by Jey

2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் வருமாறு:-

* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.

* தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.

* காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.

* தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.

* நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.

* மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.

* குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.

* மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.

* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.

* உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.

* மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.

* சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.

* பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு

* விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.

related posts