290 கிலோமீஏவுகணை கஸ்னாவி வெற்றிகரமாக ஏவப்பட்டு ர் வரை இலக்கை தாக்கும் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டு உள்ளது. இந்த ஏவுகணையின் பெயர் கஸ்னாவி என்பதாகும். பல வகையான போர்க்கப்பல்களில் இருந்தும் செயல்படுத்தி ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 290 கிலோமீட்டர் எல்லை வரை, வான் இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடியது.
“ஏவுகணை கஸ்னாவி வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளது. இது தொழில்நுட்ப ரீதியில் பாகிஸ்தான் ராணுவம் மேம்பட்டு இருப்பதை உறுதி செய்கிறது” ராணுவ தரப்பு அறிவிக்கை தெரிவிக்கிறது. ஜனாதிபதி ஏரிப் அல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய ராணுவ படை அதிகாரிகள், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.