ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தென்னிந்திய படங்களான அல்லு அர்ஜுனின் புஷ்பா படமும், யஷ்-இன் கேஜிஎப் 2 படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரிலீஸ் செய்யப்படாத படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. குறிப்பாக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் படங்கள் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளன.
2018 ஆம் ஆண்டு பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற கன்னடப் படமான கே.ஜி.எப் (KGF) படத்தின் இரண்டாம் பாகத்தை இந்த வருடம் ஜூலை 16 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா பரவலின் காரணமாக தற்போது தேதி குறிப்பிடாமல் இது ஒத்திவைக்கபட்டிள்ளது.
தெலுங்கில் பான் இந்தியா படமாக உருவாகிக்கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா (Pushpa) திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்று புஷ்பா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தற்போது கேஜிஎப் 2 படத்திற்கு சரியான ரிலீஸ் தேதி அமையாமல் இருப்பதால் கேஜிஎப் 1 ரிலீஸ் ஆன அதே தேதியில் கேஜிஎப் 2 வையும் வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பெரிய படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் செய்யப்பட்டால் தியேட்டர் கிடைப்பதில் அதிக சிரமம் ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து குரல்கள் எழத் தொடங்கி உள்ளன. கேஜிஎப் 2 படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று மிகப் பெரிய விலைக்கு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அதற்கு படக்குழு மறுத்து விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.