Home இலங்கை பொருட்களின் விலைகள் மேலும் உயருமா?

பொருட்களின் விலைகள் மேலும் உயருமா?

by Jey

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது விசேட விற்பனை வரியை விதித்து நிதி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது.

இதற்கமைய நெத்திலி மற்றும் கருவாடு ஆகியவற்றுக்கு கிலோ ஒன்றுக்கு தலா 100 ரூபா விசேட வியாபார பண்ட வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெண்ணெய் உள்ளிட்ட பால் உற்பத்திப் பொருட்கள் கிலோ ஒன்றுக்கு 880 ரூபாவும் வெந்தயம் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவும், குரக்கன் மாவு கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவும், கடுகு விதை கிலோ ஒன்றுக்கு 62 ரூபாவும் வரியாக அறவிடப்படவுள்ளது.

அத்துடன் உப்பு கிலோ ஒன்றுக்கு 40 ரூபா விற்பனை வரியாக அறவிடப்படும் எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

related posts