Home கனடா லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் ?

லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் ?

by Jey

பிரதரமர் ஜஸ்ரின் ட்ரூடே தலைமையிலான லிபரல் கட்சிக்கு இம்முறை தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்குமா என்பத சந்தேகமே எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் பிரதமர் ட்ரூடே தேர்தல் தொடர்பில் அறிவிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் லிபரல் கட்சிக்கு காணப்படும் ஆதரவு தொடர்பிலான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அண்மைய நாட்களில் லிபரல் கட்சிக்கான ஆதரவில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிபரல் கட்சிக்கு ஆதரவு குறைந்தாலும் தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய சாத்தியங்கள் அதிகளவு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts