Home கனடா ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை குடியேற்றும் நடவடிக்கையை விஸ்தரிக்கும் கனடா

ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை குடியேற்றும் நடவடிக்கையை விஸ்தரிக்கும் கனடா

by Jey

ஆப்கானிஸ்தானிய ஏதிலிகளை குடியேற்றும் நடவடிக்கைகளை கனேடிய  அரசாங்கம் விஸ்தரித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் ஆயிரக் கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை கனடா குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வரும் நிலையில், ஆப்கான் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தில் சுமார் இருபதாயிரம் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கனடாவில் குடியேற்றப்பட உள்ளனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கனேடிய குடிவரவு அமைச்சர் Marco Mendicino ஆப்கான் ஏதிலிகளை குடியேற்றும் திட்டம் பற்றி விளக்கியுள்ளார்.

related posts