Home இலங்கை ஜனாதிபதி செயலகம் வரும் வரையில் சுகாதார அமைச்சு பறி போகும் என தெரியாது

ஜனாதிபதி செயலகம் வரும் வரையில் சுகாதார அமைச்சு பறி போகும் என தெரியாது

by Jey

சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி இன்று போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டதால் அமைச்சின் உத்தியோகத்தர்களிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.

அப்போது அவர் சுகாதார அமைச்சின் இருந்து செல்வது கவலை அளிப்பதாகவும் எதிர்பாராத நேரத்தில் அமைச்சு மாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் பவித்ரா கூறியுள்ளார்.

அத்துடன் பவித்ரா வன்னியாராச்சி ஒரு கதையையும் கூறினார்.

மன்னர் ஒருவரும் வழிபோக்கனும் வேட்டைக்குச் செல்வது வழக்கம். அவர்களது குறி ஒரு போதும் தவாறாது. குறி தவறும் போது எல்லாம் நன்மைக்கே என வழிபோக்கன் கூறுவார். ஒருநாள் மன்னரின் வாளில் அவரது விரல் வெட்டுப்பட்டது. அப்போது இதுவும் நன்மைக்கே என வழிபோக்கன் கூறினார். உடனே ஆத்திரமடைந்த மன்னர் என் விரல் வெட்டுப்படுவதை நன்மைக்கு என்று நீ சொல்கிறாயா என்று ஆத்திரத்தில் வழிபோக்கனை குழிவில் போட்டுவிட்டார். பின்னர் மன்னர் தனி வழியே வேட்டைக்கு சென்றார். அப்போது ஒரு அரக்கர் கூட்டத்திடம் மன்னர் மாட்டிக் கொண்டார். அவர்கள் முழு மனிதனை பலி கொடுக்க தேடிக் கொண்டிருந்தனர். மன்னர் அவர்களிடம் சிக்கிய போதும் விரல் துண்டு ஒன்று இல்லாத காரணத்தால் அரக்கர்கள் அவரை விட்டுவிட்டனர். உடனே மன்னர் வழிபோக்கன் கூறியதை நினைத்து விரல் வெட்டுப்பட்டது நன்மைக்கே என உணர்ந்தார். பின் உடனே சென்று குழியில் இருந்த வழிபோக்கனை வௌியில் எடுத்து நடந்ததை கூறினார். உடனே வழிபோக்கனும் நீங்கள் என்னை குழியில் தள்ளியதும் நன்மைக்கே என்றான். இல்லையேல் நானும் உங்களுடன் வந்திருப்பேன். அப்போது முழுமையான மனிததான நானே அகப்பட்டு அரக்கர்களின் பலி பூஜைக்கு இலக்காகி இருப்பேன். என்று கூறியதாக கதை கூறிய பவித்ரா நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என நினைத்து மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தார்.

related posts