Home உலகம் தலிபான்களின் வெற்றி உலக நாடுகளின் தோல்வியாகும்

தலிபான்களின் வெற்றி உலக நாடுகளின் தோல்வியாகும்

by Jey

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது உலக நாடுகளின் தோல்வி என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆப்கான் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆப்கான் மக்கள் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளது குறித்து பிரிட்டன் கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வெலஸ் கூறும்போது, “ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது உலக நாடுகளின் தோல்வி. ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது.

ஆப்கானிஸ்தானின் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இது உலக நாடுகளுக்கான முடிவடையாத பிரச்சினை. உலக நாடுகள் நிச்சயம் உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

related posts