ஒன்றாரியோ மாகாணத்தில் ஆபத்துக்களை எதிர்நோக்கக் கூடியவர்களுக்கு கொவிட் மூன்றாம் மாத்திரை வழங்கப்பட உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மூன்றாம் மாத்திரை தடுப்பூசியையும் ஏற்றுவதற்கு மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஓய்வூ இல்லங்கள், நீண்ட கால பராமரிப்பு மையங்கள், உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள், இரத்தத்துடன் தொடர்புடைய புற்று நோய் உடையவர்கள் உள்ளிட்ட பலருக்கு இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
மூன்றாவது தடுப்பூசி ஏற்றுகை நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசியின் மூன்றாவது மாத்திரையை ஏற்றும் முதல் கனேடிய மாகாணமாக ஒன்றாரியோ காணப்படுகின்றது.
வயது மூப்படைந்தவர்கள் மற்றும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றாவது மாத்திரை தடுப்பூசி வழங்குவது பொருத்தமானது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.