ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானை சேர்ந்த 20,000 பேரை நாட்டில் குடியமர்த்துவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
முதல் ஆண்டில் பெண்கள், யுவதிகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் பட்டியலில் உள்ள 5,000 பேருக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது.