எரிபொருளை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நாணய இருப்பை சேமித்து, நாட்டுக்கு அவசியமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றை கொண்டுவருவதற்கு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு நாணய இருப்பு சார்ந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதே உண்மை நிலையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 6 மாதங்களில் நாட்டின் இறக்குமதி செலவினத்தில் 18 வீதமாக காணப்பட்ட எரிபொருள், அடுத்த 6 மாதங்களில் 25 வீதமாக உயர்வடையும் எனவும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.