தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என ஒன்றாரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும், மாகாண முதல்வருமான டக் போர்ட் அறிவித்துள்ளார்.
கட்சியின் உறுப்பினர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களுடன் அதிகளவில் தொடர்புபடும் பணிகளில் ஈடுபடும் காரணத்தினால் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் கட்சியின் எத்தனை உறுப்பினர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டனர் எத்தனை பேர் இன்னமும் ஏற்றிக்கொள்ளவில்லை என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பெரும் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுகையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.