தற்போதுள்ள நிலையில் நாட்டை மூட முடியாது என ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி அமைச்சர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டை தற்போது மூடினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அன்றாடம் வாழ்வாதாரத்தை உழைக்கும் மக்கள் கஸ்டப்படுவர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் கொரோனா ஒழிப்பிற்கு தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த நடவடக்கை எடுத்து வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.