ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த 05 நாட்களில் 18,000 இற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நேட்டோ (NATO) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூல் நகரை தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.
அன்றிலிருந்து வௌிநாட்டு பிரஜைகளும் சில ஆப்கானியர்களும் அங்கிருந்து வௌியேறி வருகின்றனர்.
நாட்டை விட்டு வௌியேறும் நோக்கில் காபூலில் பலர் ஒன்றுகூடியதால் ஏற்பட்ட நெரிசல் மற்றும் துப்பாக்கிச் சூடு என்பவற்றில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.