Home கனடா பொதுத்துறைசார் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும்

பொதுத்துறைசார் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும்

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் அனைத்து பொதுத்துறை பணியாளர்களும் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண அரசாங்கத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் 64000 பொதுத்துறை பணியாளர்கள் கடமையாற்றி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனைத்து பணியாளர்களும் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் அல்லது அடிக்கடி கொவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ள முடியாதவர்கள் ஏன் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முடியவில்லை என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கான கால வரையறைகள் எதனையும் இதுவரையில் மாகாண அரசாங்கம் நிர்ணயம் செய்யவில்லை.

related posts