நாட்டை நீண்ட நாட்களுக்கு முடக்க வேண்டி ஏற்பட்டால் மக்கள் தியாகங்களை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுமக்களுக்கு தற்போது உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் தற்போதைய காலக்கட்டத்தை கவனத்தில் கொண்டு மக்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள மேண்டுமென ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டை முழுமையாக முடக்குவதன் ஊடாக நாட்டில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என ஜனாதிபதிகுறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முழுமையாக முடக்குவதினால் ஏற்படும் விளைவுகளை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வல்லரசு நாடுகள் கூட நாட்டை திறந்தே வைத்துள்ளதாகவும், இதனால் சிறிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாமும் சுற்றுலாதுறையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்க இந்த காலப்பகுதி பொருத்தமானது இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் ஊடாக நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 60 வயதுக்கும் மேற்ப்பட்ட நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையேனும் என்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு சுகாதார தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 30 வயதை கடந்த 43 வீதமானவர்கள் தமது இரண்டாவது தடுப்பூசியை பெற்று கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
மேலும், 30 வயதை கடந்த அனைவருக்கும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன் இரண்டாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.