Home கனடா தடுப்பூசி போடாதவர்கள் பணி நீக்கப்படுவர்

தடுப்பூசி போடாதவர்கள் பணி நீக்கப்படுவர்

by Jey

கொவிட் தடுப்பூசி போடாதவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என றொரன்டோ பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்திற்குள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என தெரிவித்துள்ளது.

றொரன்டோ பொது வைத்தியசாலை, றொரன்டோ மேற்கு வைத்தியசாலை, பிரின்ஸஸ் மார்கிரட் வைத்தியசாலை என்பனவற்றில் பணியாற்றி வரும் அனைத்து பணியாளர்களுக்கும் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 900க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றிகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசி ஏற்றிக கொள்ளாதவர்கள் செப்டம்பர் மாதம் 8ம் திகதி முதல் மாத்திரையை ஏற்றிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

related posts