Home கனடா ஆப்கானிஸ்தான் நிலைமைகள் குறித்து அமைச்சர்கள் விளக்கம்

ஆப்கானிஸ்தான் நிலைமைகள் குறித்து அமைச்சர்கள் விளக்கம்

by Jey

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைகள் குறித்து கனேடிய அமைச்சர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

கனேடிய குடிவரவு அமைச்சர்  Marco Mendicino மற்றும் மூன்று அமைச்சர்கள் இது தொடர்பில் விளக்கம் அளிக்க உள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து இரண்டாவது தடவையாக 106 ஆப்கான் பிரஜைகள் விசேட இராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

தேசிய பாதுகாப்பு அமைச்சர்  Harjit Sajjan, வெளிவிவகார அமைச்சர்  Marc Garneau மற்றும் பெண்கள் மற்றும் பால்நிலை சமத்துவ அமைச்சர் Maryam Monsef ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கனேடியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகளை வெளியேற்றுவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலை என்பன குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

related posts