கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் இளம் வாக்காளர்களிடம் சமூக ஊடகங்களின் வழியாக பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்தி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
டிக்டாக் ஊடாகவும் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இளம் கனேடியர்கள் அதிகளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதனால் அவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுக்க கட்சிகளின் தலைவர்குள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர்.
என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங், டிக்டாக் ஊடாக இளம் சமூகத்தினரை கவரும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்.