இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் காணப்படும் டொலர் குறைபாடே இதற்கு காரணம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தை இலங்கை ரூபாவில் உள்நாட்டு வங்கிகளுக்கு செலுத்தி உள்ளதாகவும் குறித்த வாங்கிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டொலர்களை செலுத்தாததால் துறைமுகத்திலிருந்து கொள்கலன்களை விடுவித்துக் கொள்ள முடியாதுள்ளதென இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் நாளுக்கு நாள் தாமதக் கட்டணம் அதிகரித்துச் செல்வதாகவும் அதில் நிவாரணம் வழங்க சுங்கப் பிரிவினர் மறுத்து வருவதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக தாமதக் கட்டணம் செலுத்தி பொருட்களை விடுவித்துக் கொண்டாலும் சந்தைக்கு விநியோகிக்கும் போது விலைகளை அதிகரிக்க நேரிடும் என இறக்குமதியாளர்கள் கூறுகின்றன.0
இதனால் அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்க வேண்டுமென இறக்குமதியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.