கனடாவில் கடும்போக்குவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலதுசாரி கடும்போக்குவாத அமைப்புக்கள் தற்போதைய மற்றும் முன்னாள் படையினர், பொலிஸாரை கடமையில் அமர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய புலனாய்வுப் பிரிவினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
வன்முறைகளில் ஈடுபடும் கடும்போக்குவாதிகளுக்கும், படைவீரர்களுக்கும், பொலிஸாருக்கும் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எம்.வீ எனப்படும் கடும்போக்குவாத அமைப்பு இவ்வாறு கனேடியாகளை பணிக்கு அமர்த்தியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் மட்டுமன்றி அமெரிக்கா, ஜெர்மனி, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்த கடும்போக்குவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.