ஸ்காப்ரோவில் பள்ளிவாசல் ஒன்று உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் இவ்வாறு பள்ளிவாசல் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த பொருட்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
ஸ்காப்ரோவின் பிரிம்லீ வீதியில் அமைந்துள்ள Baitul Jannah Islamic Centre பள்ளிவாசலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழிபாட்டு அறைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதுடன் குர்ஆன்களும் கிழித்து எறியப்பட்டுள்ளன.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த பள்ளிவாசலின் தலைவர் Atiquar Rahman தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த பள்ளிவாசல் மீது பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.