Home இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் விடுக்கும் கடுமையான எச்சரிக்கை

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் விடுக்கும் கடுமையான எச்சரிக்கை

by Jey

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நாட்டில் கொரோனா மரணங்கள் 6000 – 10,000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் முன்பு ஏற்பட்ட கொரோனா அலைகளைவிட இம்முறை ஏற்பட்டுள்ள அலை அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

வைரஸ் பிறழ்வு அதிகரிக்கும் போது அதன் பாதிப்புக்கள் கடுமையானதாக இருக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டில் இடம்பெற்றும் தடுப்பூசி திட்டம் குறித்து கடும் விமர்சனம் முன்வைத்துள்ள அவர் ஜனாதிபதிக்கு தாங்கள் வழங்கிய தடுப்பூசி திட்டம் தொடர்பான யோசனையை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும் அவரை மீறி தமது யோசனையில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தமது யோசனைபடி 60 வயதிற்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் 80% மரணங்களை தடுத்திருக்கலாம் என செனால் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

related posts