Home கனடா ஆப்கானிலிருந்து மக்களை வெளியேற்றுவதில் கனடாவின் முனைப்பு போதுமானதல்ல

ஆப்கானிலிருந்து மக்களை வெளியேற்றுவதில் கனடாவின் முனைப்பு போதுமானதல்ல

by Jey

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவதில் கனடாவின் முனைப்பு போதுமானதல்ல என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனேடிய ஊடகவியலாளர் Kevin Newman இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது கனடாவின் முனைப்பு மந்த கதியில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு பல நாடுகள் பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் கனடாவின் நடவடிக்கைகள் திருப்தி  அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தூதரக அதிகாரிகளையும் இராணுவத்தையும் முன்கூட்டியே கனடா அழைப்பித்துக்கொண்ட காரணத்தினால் சரியான முறையில் மக்களை அழைத்து வருவதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

related posts