Home உலகம் ஆப்கானிஸ்தானிலிருந்து சுவிஸ் பணியாளர்குள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானிலிருந்து சுவிஸ் பணியாளர்குள் வெளியேற்றம்

by Jey

ஆப்கானிஸ்தானில் இருந்த சுவிஸ் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து சுவிஸ் குடிமக்களும் உள்ளூர் மக்களும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் அறிவித்துள்ளது.

ஆப்கானில் இருந்து மொத்தமாக 292 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சுமார் 60 பேர் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், அவர்கள் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானுக்கு வெளியேற்றப்படுவதற்காக காத்திருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ், கூறினார்.

இந்த வகையான மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் ஒன்று கிட்டத்தட்ட அதன் முடிவடையும் தறுவாயில் உள்ளதாக காசிஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இவற்றுக்கு மேலதிகமாக சுவிட்சர்லாந்து வேறு எந்த வெளியேற்றத்தையும் திட்டமிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற விரும்பும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் நம்புகிறது.

சுவிஸ் வெளியேற்ற முயற்சிக்கு உதவிய ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு காசிஸ் வெளிப்படையாக நன்றி தெரிவித்தார்.

சுவிஸ் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 141 ஆப்கானிஸ்தான் ஊழியர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் உட்பட 219 பேருடன் ஒரு விமானம் சுவிட்சர்லாந்தின் முக்கிய விமான நிலையமான சூரிச்சை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.

related posts